காவிரிதாயே நீதான் வரவேண்டும்
காவிரிதாயே ஏன் பிறந்தாய்? ஏன் வளர்த்தாய்?
இந்த இரு பிள்ளைகளை..........
தாம் இருவரும் ஒரு தாய் பிள்ளைகள்
என்பதை மறந்து
நடுரோட்டில் சண்டையிட்டு கொள்கிறார்களே !!!!
ஏன் பிறந்தாய்? ஏன் வளர்த்தாய்?
இந்த இரு பிள்ளைகளை..........
அவர்கள் போடும் சண்டையை
அண்டைய நாட்டினரும் கைதட்டி
சிரிக்கும் அளவிற்கு ஒருவரை ஒருவர்
சிதைத்து கொள்கிறார்களே !!!!
ஏன் பிறந்தாய்? ஏன் வளர்த்தாய்?
இந்த இரு பிள்ளைகளை..........
நாம் இந்தியன் என்பதை மறந்து
நாம் இருவேறு இனத்தவன் என்று
மானம் இல்லாமல் ஒருவரை ஒருவர்
மானபங்க படுத்தி கொள்கிறார்களே !!!!
ஏன் பிறந்தாய்? ஏன் வளர்த்தாய்?
இந்த இரு பிள்ளைகளை..........
உன் சொத்தை பங்குவைக்க
உச்சநீதிமன்றம் வரைசென்றும்
தீர்ப்புவந்தும் தீராத பிரச்சனை......
தீர்த்துவைக்க நீதான் வரவேண்டும்............