முகப்பிரசாதம்

முகப்பிரசாதம்
==============

வழிவிளக்கின் வெளிச்சம்
ஜன்னல் கடந்து எத்தி
சுவரில் வரைகின்ற நிழல் சித்திரம் நோக்கி
அவள் கிடந்திருந்தாள்
தெய்வத்தின் கண்கள்
பின்னாம் புறத்தாய் இருக்கணும்
இல்லையென்றால்
காருண்யம் உறவெடுத்து சுரக்கின்ற
திவ்விய ஜோதிசாகி,
கேட்போருக்கு சாந்தனமாகி
தீண்டுவோருக்கு கன சுவரங்களாகி
என்னுடனான
கனவுகளில் ஆழம் கண்டு
வியர்ப்புக் கூட்டி
ஏதும் சொல்லாவிட்டாலும்
என் முன்னிலையில்
அவள்தானே என்ற
ஒரு காலம் வருமாயிருக்கலாம்
பின் எங்கே எங்ஙனம்
தெய்வம் அவளுக்குள் குடியேறி
பிடிவாதம் பிடித்து
என் ஏகவதனம் இருத்தி கொடி நாட்டியது

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (30-Sep-16, 4:59 am)
பார்வை : 103

மேலே