உன் மௌனம் கலைப்பாயோ

யாருக்கும் எட்டா நிலவு என் அலைபேசியில் தினமும் நீ
நீ வருவதால் தானோ எனக்கு தினமும் பௌர்ணமயானதோ
அலைபேசியில் உன் முகம் காணவே மதி கண்ட அல்லி ஆனேனடி
நீ திட்டும் வார்த்தை கூட எனக்கோ தேவாரம் ஆனதடி
உன் வருகை காணா நேரமோ கதிரவன் காணா தாமரை ஆனேனே
உன் குருஞ்செய்தி வரா வேளையிலே என் குருதியும் உறயுதடி
உன்னிடம் பேசா ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் போகுதடி
வேகமாய் வா என் தேவதையே என் உயிரும் போகும் முன்பே!

குமா கருவாடு

எழுதியவர் : குமா கருவாடு (30-Sep-16, 10:16 pm)
சேர்த்தது : கருவாடு
பார்வை : 103

மேலே