சம்மதம் சொல்வாயா
சம்மதம் சொல்வாயா எம்மதமென்று பாராமல்
கூறாதுக் கொல்லாதே கூர்விழிப் பார்வையால் !
கேள்விகள் கேட்காமல் கேட்டதும் சொல்லிடு
வேள்விகள் நடத்தாதே வெட்டியாக நெஞ்சினில் !
நொடியும் கழிகிறது மணித்துளியாய் மாறுகிறது
துடித்திடும் இதயமும் வெடிக்கிற நிலையாகுது !
வழிந்திடும் விழிகளும் உறக்கத்தைத் துறக்கிறது
பொழிந்திடும் மழையும் கண்ணீராய்த் தெரிகிறது !
காத்திருக்க நேரமில்லை மாற்றியும் யோசிக்காதே
பார்க்கிறேன் பாதையை மாற்றாதே வழியையும் !
என்வாழ்வும் உன்னிடம் ஏங்குகிறேன் எந்நேரமும்
எதிர்மறையாக பதிலையும் கூறாதே என்னிடமும் !
மறக்காதே தூக்கத்திலும் எரித்திடாதே பார்வையால்
மன்னிப்பும் வழங்கிடுவாய் தவறேதும் செய்திருந்தால் !
பொன்னான வாழ்வொன்றும் காத்துள்ளது நமக்காக
பொன்மனமே புரிந்திடுக புண்ணாக்காதே என்மனதை !
கண்மணியே வந்திடுவாய் கனிவாகக் கூறிடுவாய்
மகிழ்வோடு வாழ்ந்திட உரைத்திடுவாய் எனக்கு
தள்ளியும் போடாதே தாங்காது உள்ளமும்
சொல்லிடு உன் சாகசப் பார்வைகளாலே ....
பழனி குமார்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
