தண்ணீரில் நனைந்த கண்ணீர் போல

நிலவை வான் சுமக்க
உன் நினைவை
நான் சுமக்க
தலை தூக்கி விட்ட காதல்
தலையெழுத்தை
மாதிருச்சே..

அன்பூட்டி வளர்த்த காதல்
அடியெடுத்து
வைக்கும் முன்னே
நஞ்சுண்டு மாண்டதம்மா..

உன் மௌனம்
என்னை தாக்க
என் மதியில்
நீ விழிக்க
மனதும் மாண்டதம்மா
நடை பிணமாய் நான்..

என் கருத்தில்
நீ இருக்க
நான் எழுதிய
கவியெல்லாம்
கண்ணீரில் கரைந்ததம்மா
என் காலம் முடிந்ததம்மா..

உன் சொல்
என்னுள் இடி இடிக்க
உன் நினைவு
என்னுள் மழை தூர
உன் நினைவில்
நனைந்தேனம்மா
சொர்க்கத்தை கண்டேனம்மா..

இன்றும் என் காதல்
தண்ணீரில் நனைந்த
கண்ணீராய்
தடம் தெரியாமல் போனதம்மா..!!

😢

வலிகளுடன்..
அன்புடன் அனாதையாய்..

குட்டி..!!

எழுதியவர் : குட்டி (2-Oct-16, 1:18 am)
சேர்த்தது : நாகரீக கோமாளி
பார்வை : 129

மேலே