ஓராயிரம் நீ க்கள்

ஒரு வானம்
உனது
மறு வானமும் உனதே....
என் நிலவைக் காணவில்லை
தொடமுடியா உன் நட்சத்திரங்கள்
ஆகிவிட்டன அது.
என்னில் நீளும் தொடுவானத்தில்
உனது தனித்த நடை
என் ஆயுள் மீறுகிறது...
சனி இரவுகளின்
அலைபேசி கொஞ்சல்களை
துயரமாக்கிக் கொண்டேன்.
பின் பேசி பேசி நீ போடும்
சண்டைகளில்
என்னை உன் சாயலாக்கிக்
கொண்டேன்...
எத்திசையில் இருந்தாவது
வந்து சேரும் உன் குறுஞ்செய்தி
ஒன்றுக்கு உயிர் சேர்த்து
வைத்திருக்கிறேன்.
காதலை பகிர்ந்து கொண்ட
ஒரு பால்கனி நாடகத்தில்
அரங்கேறிக் கொண்டே
இருக்கிறது முரண்பட்ட நம்
உடன்பாடுகள்...
இளைப்பாறலின் நிமித்தம் உன் தேநீரை
நானே தயாரித்து நானே
பருகுகிறேன்
என்ன செய்ய
உன் பித்து பிடித்தவனின்
கனவுக்குள் ஓராயிரம் நீ க்கள்

கவிஜி

எழுதியவர் : கவிஜி (1-Oct-16, 11:24 pm)
Tanglish : oraayiram nee kagal
பார்வை : 345

மேலே