நேரம் தவறி

காத்திருந்தேன் காலம் காலமாக
விடியும் என்ற எண்ணத்தில்.

விடிவது தினம் தானே
என்ற போதும்
நல்ல காலத்துக்காக
பொறுத்திருந்தேன்.

நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு
அபாரமாக. நம்பினவனுக்கு
கை மேல் பலன் என்பது
சொல்லளவே.

மனம் பட்ட பாடு சொல்வொண்ணா
கண்ணில் வடிந்த நீரோ
கட்டுக்கடங்கா.

பதற்றம் எதிலும்
உடலோ ஓத்துழைக்க மறுக்க
உள்ளமோ துண்டுத துண்டாகச்
சிதற.

சுற்றமோ எள்ளி நகையாட
பிஞ்சுகளோ கரம் பிடிக்க
துணையோ வதங்கி வாட.

ஏதோ ஒரு மனதோடு
நின்று பிடித்தேன்
கிடைத்தது வரம்
நேரம் தவறி.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (2-Oct-16, 6:48 pm)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : neram thavari
பார்வை : 2368

மேலே