நம்பியிருக்கும் நெஞ்சங்கள்

உசிரு ஒட்டிக்கிட்டு இருக்குதே ​
​உழவோ உயிரையும் விடுதே
இயற்கை எமைக் கைவிடுதே
நிலமும் மறைந்துப் போகுதே
நீரினால் போரும் மூளுதே !

விதைகளும் வீணாகிப் போகுதே
விளைநிலம் என்பதே மறையுதே
விளைச்சல் என்பதும் மறக்குதே
வயல்வெளி சமவெளி ஆகுதே
காடுகளும் வீடுகளாய் மாறுதே !

​உழுதிட்ட நிலங்கள் பாலையாகி
உழுதவர் அழுகின்ற நிலையாகி
உழுகின்ற உயிர்கள் கழுமரமேறி
​உயிரை மாய்த்திடும் நிகழ்வுகள்
​உள்ளத்தை உலுக்குது உருக்குது !

அன்னாந்துப் பார்த்தே அன்றாடம்
உண்ணா நோன்புடனே கழிகிறது !
முப்போகம் விளைந்த காரணத்தால்
சுகபோகமாய் வாழ்ந்த குடும்பங்கள்
வறுமையின் விளிம்பில் நிற்கிறது !

வெளிறிய முகங்களும் மாறிடவும்
வெறுத்த நெஞ்சங்கள் தேறிடவும்
வெற்றிடமான வயலும் பசுமையாகி
வருந்தும் உள்ளங்கள் வாழ்த்திடவும்
வெளுக்காம போகாது கிழக்கு !

​பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (3-Oct-16, 3:15 pm)
பார்வை : 205

மேலே