சொர்க்கத்தில்

பத்து மாதம் பார்க்காமலே
வளர்ந்து வந்த என்
தாயின் கருவறை - சொர்க்கமே!!
என்னை முதலில் கையில்
ஏந்திய என் தந்தையின்
கைகள் எனக்கு -சொர்க்கமே!!
பாசமாய் என் பாட்டியின் தாலாட்டில்
மடியில் என்னை மறந்து உறங்கிய
இடம் எனக்கு -சொர்க்கமே!!
என் அழுகுரல் கேட்டதுமே ஒடி
வந்து என்னை தோழில் ஏந்தி
நான் தூங்கும் வரை தூங்காமல்
என்னை தூங்க வாய்த்த
என் தாய் தந்தையின்
தோழ்கள் எனக்கு - சொர்க்கமே!!
தூக்க கூட முடியாது என்றாலும்
நயமாய் என்னை ஏந்தி கொஞ்சி மகிழ்ந்த
எனது அக்காவின் கைகள் எனக்கு - சொர்க்கமே!!
-------------------------------------------------------------------------
***யாரும் இறந்த பின் எங்கு போவோம் என
வருந்தாமல் வாழும் போதே சொர்க்கத்தில் தான்
நம் வாழ்கிறோம் என மகிழ்ச்சியாய் வாழ்வோம்
இந்த உறவுகளை இழக்காமல்***.

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (3-Oct-16, 10:23 pm)
சேர்த்தது : தினேஷ்குமார்
பார்வை : 575

மேலே