காதலே கண்மணியே நன்றிநன்றி
நீரிலும், நிலத்திலும் வாழும்,
என் இதயத்தின் பேசும் உயிரினம்....காதலியே உனது கண்களடி !!
உன் பார்வையில் நான் இருக்கின்றபோது,
நான் கொழு பொம்மையாய் வாழ்கிறேன்...உன் விரல்களின் அணிவரிசையில்!!
நீ எனக்காக சிந்திய கண்ணீர்த் துளிகளிலதான்,
இன்று உன் நிழலாய் வளர்ந்திருக்கிறேன்......மனிதனாக!
தேவதையை எதிர்பார்த்திருந்தால் கதையாய் முடிந்திருப்பேன் .....
உன்னில் இணைந்ததினால்தான்... இன்று கவியாய் உருவெடுத்தேன்!!
காதலே !.கண்மணியே ! நன்றி....நன்றி....