தாயில்லை தாலாட்ட

தாயில்லை தாலாட்ட
****தம்பியுனைத் தூங்கவைக்க !
பாயிருந்தும் படுக்கவில்லை
****பசியாறப் பாலில்லை !

கோயிலிலும் தெய்வமில்லை
கூடடைய வீடில்லை !
தீயினுள்ளே விறகைப்போல்
****சிவந்தவுளம் எரிகிறதே !

சொந்தமென யாருமில்லை
****சுகம்கிடைக்க வழியுமில்லை !
வந்துவிட்டோம் உலகினிலே
****வாழவைப்பேன் அண்ணனுனை !

நொந்தாலும் நித்திரையில்
****நொடியேனும் அமைதிகொள்வோம் !
இந்தநிலை ஏன்கொடுத்தாய்
****இறைவாநீ பதில்சொல்வாய் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (4-Oct-16, 8:51 pm)
பார்வை : 69

மேலே