சந்தோஷ கீற்று -கவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
வாயிலின் முன்னே
குறுக்கும் நெடுக்குமாய்
மனதில் ஆயிரமாயிரம்
எண்ணங்களோடே!
அலைந்தான்
உதிப்பது
தாமரையா ? அல்லது
துணையாள் தொழுது
வேண்டி கொண்ட
துணைக்கொடியா ?
அழுகுரல் கேட்டே
ஆனந்தம் மேலிட
ஆவலுடன் எட்டிப் பார்க்க
துடிக்கையில்…..
என்ன அவசரம் ? என்ற
செவிலியரின்
வார்த்தைகளுக்குள்ளே
அடக்கமாக……
இன்னொரு செவிலியரின
கரம் தழுவி கிடந்த துவே
அன்று பூத்த தாமரையாய் !
மலர்ந்திருந்தது
மகளாகவே !
தாமரையை ஈந்த
தாமரையின் முகத்திலோ
சிறு ஏக்க கீற்று
ஓடிக்கொண்டிருக்க…
சந்தோஷக் கீற்று
சதிராடியது
என் முகத்திலே !