இரு சுமைதாங்கிகள்
![](https://eluthu.com/images/loading.gif)
சாலையோர குப்பைபொருக்கி
சாக்கடையில் நெகிழிக் கிண்ணங்களைப்பொருக்கி...
சந்தர்ப்பங்களால் எட்டி உதைக்கப்பட்ட சமுகத்தின்
சந்திப்பிழையான மரத்தடிச் சிறார்கள் இங்கு ஏராளம்...
கட்டுக்கட்டாய் பணமிரைத்து கட்டணங்கள் பலகொடுத்து
கட்டிடங்கள் பலவற்றில் கல்வியினை அடைகாக்க...
கடனாளியாக்கப்பட்டும் களங்கிடாது கனவுக்கோட்டை கட்டும்
கபடமற்ற கழனிக்காரர்களும் தாராளம்...
வயதொத்த சிறார்கள் சிலர் கல்விக்கூடம் நோக்கிச்செல்ல
வழிப்போக்கனாய் செல்லும் பாவப்பிறவிகளைப்பற்றி நானென்ன சொல்ல...