விழுந்த விதை
![](https://eluthu.com/images/loading.gif)
ஓடும் பாதையும் ஒடுங்கி போக
காணும் கனவும் கலைந்து போக
படித்த பட்டம் பறந்தது போக
வாழ நினைத்தும் வாழ முடியாமல்
நாடு ரோட்டில் பிச்சையெடுக்கவும் தெரியாமல்
விழுந்து கிடக்கிறேன் விதையாய் மண்ணில்...
விழுந்த விதையும் மூலையில் ஏங்குகிறது
வாழ்வில் ஒளிகிடைக்குமா என்று...!
மானத்தையும் மனிதநேயத்தையும் செருப்பாய்
கழட்டிவிட்டு ஊனத்தை மனதில் ஏந்தி செல்லும்
சகமனிதர்கள் என் கண்முன்னே..!
ஊனை உருக்கி உண்டு வாழ்பவர் மத்தியில்
என் உடலை உருக்கி வாழ்கிறேன் வயிற்றுக்காக
தவிக்கும் வாய்க்கு தண்ணீர் இல்லை
தத்தளிக்கும் குழந்தைக்கு ஒரு துளி பால் இல்லை
முடங்கி கிடக்கிறேன் ஓர் மூலையில் ஊனமாய்
பைத்தியக்கார உலகில் பிறந்த பைத்தியமாய் நானும்
விழுகிறேன் விதையாய் மனதால் முடிந்தால் எழுகிறேன் மரமாய்...!
==================================================
பிரியமுடன்,
J K பாலாஜி