என்னை என்ன செய்தாய்

என் சுவாச காற்றுயெங்கிலும்
உன் வாசம் வீச செய்தாய் !
காட்டாற்று வெள்ளமாய் என் நெஞ்சமெங்கும்
அலை வீச செய்தாய் !
கண்கள் இரண்டிலும் கலையாத
கனவுகள் பல காண செய்தாய் !
உன் காந்த விழிகள் என்னை தீண்டும் பொழுதெல்லாம்
உன்னை நோக்கி என்னை ஈர்க்க செய்தாய் !
என்னை எனக்கே உணர செய்தவளும் நீதானே !
என்னில் உன்னை காண செய்தவளும் நீதானே !
எப்போதடி தொலைத்தேன் என் இதயத்தை
இன்று வரை தேடி கொண்டிருக்கிறேன் உன் கண்களில் !