காதலின் அடையாளம்

மலரினும் மெல்லியது காதல்
பயணிப்பது இறகு மெத்தையிலேயே.

ஆனாலும்

காதலின் சிகரமாயே காமம்
கூந்தலை இறுக்கிக் கலையவிட்டு
இதழை கடித்துக் கனியவைத்து
கன்னங்களைக் அழுத்திக் காயப்படுத்தி
ஆசையின் உச்சவெறி உணர்த்தி
காயங்களையே நினைவு இன்பமாக்கி

இறுதியில்

மயக்கத்தில் குலைந்து உலறவைத்து
உலர்ந்து சருகையும் மலரவைத்து

மறுபடியும்
முடிவிலே சண்டையிடுவதே காதல்.
ஊடலும் கூடலும் காதலின் பக்கங்கள்.

எழுதியவர் : jujuma (1-Jul-11, 2:29 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 298

மேலே