நெஞ்சத்தின் வலி

கொட்டித் தீர்த்துவிட்டாய் உன் மனதை
உனக்கும் ஏதோ வலி இருந்துவிட்டதாய்.

சுட்டிப் பார்த்துக்கொள் உன் நெஞ்சத்தினுள்
ஒரு நொடியினில் கிடைக்க இருந்த
வெற்றியினை எப்படித் தொலைத்தாய் என்று.

கட்டிவைத்து பொத்திவைத்த காதலை
எப்படி கசக்கிக் கலைத்தாய் என்று.

நெஞ்சில் ஈரமின்றி நினைவில் தெளிவுமின்றி
பஞ்சு மெத்தையில் துயில்ந்து கிடந்தாய்.

கவிதை மொழி படுக்கை கிடைக்க, கவியின்
பொய் மொழியுரைத்தே நீலிக்கண்ணீர்.

உண்மையை இப்பொழுதாவது உரைத்திடு
எறிந்திட்ட பூ புன்னகைக்கவா புறந்தள்ளவா என்று.

எழுதியவர் : jujuma (1-Jul-11, 2:08 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 388

மேலே