கடவுள்- ராமு,சோமு உரையாடல்

ராமு : டேய் சோமு கடவுளை பார்க்கவில்லை
பிறகு அவர் உள்ளார் என்று எப்படி
கூறுகின்றார்கள் ?

சோமு : இது ரொம்ப 'சிம்பிள்' அண்ணே

ராமு : எப்படி சொல்லு பார்ப்போம்

சோமு : அண்ணே நீங்க உங்க தந்தையை பார்த்திருக்கீங்க
அவர் தந்தையைக் கூட பார்த்திருக்கலாம்
தந்தைக்கு தந்தைக்கு தந்தையைப் பார்த்ததுண்டா

ராமு : இல்லையே

சோமு : ஆனால் அவரை உங்க தந்தை பார்த்திருப்பார்

ராமு : அடுக்கு என்னடா இப்போ

சோமு : இருக்கு அண்ணே

இப்போ பாருங்க நான் பார்த்தது மட்டும் நிஜம் என்று
எப்போதும் சொல்ல முடியாது
நாம் காணாததை சிலர் கொண்டிருப்பார்
அதை நிஜம் என்றுதான் கொள்ளல் வேண்டும்

அண்ணே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே
நம் ரிஷிகள் கடவுளை கண்டதுண்டு அவர்கள்
அதை குரு-சிஷ்ய முறையிலே கூற
நம்மை வந்து அடைந்திருக்கு
நாம் காணமுடியவில்லையே என்று
ஒருவர் கண்டதை மறுப்பது எப்படி அண்ணே

ராமு : சரியாய் சொன்ன என் சிறிய மூளைக்கு இது
எட்டலையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Oct-16, 1:00 pm)
பார்வை : 212

மேலே