ஹைக்கூ
முதிர்கண்ணி
விற்கும் பூ மட்டும்
மலர்ந்துவிடுகிறது !!
என் ஊர் வாசனையை
நினைவூட்டி விடுகிறது
விழுந்த மழைத்துளி !!
பிள்ளையின் வருகை
பாதையை விரிவுப்படுத்துகிறாள்
அம்மாவின் அறுவை சிகிச்சை !!
சுரண்டல் காரர்களுக்கு
எட்டவில்லை
என் வானம் !!
மருத்துவமனை பராமரிப்பு
சிகிச்சையில் மாற்றம்
அறுவை சிகிச்சை !!
கடந்த புகைவண்டியை
வழியனுப்புகிறது
புல்வெளி !!
தூரப்பார்வை இனிக்கிறது
கிட்டப்பார்வை கசக்கிறது
குடிசை வீடு !!