இணையதளமும் என் காதலும்

மின்னஞ்சலில்
வந்த
பொண்ணூஞ்சல்..!

முகநூலில்
பாடும்
பஞ்சவர்ண கிளி...!

பகிறியில்
பேசும்
என் கவிதை
விசிறி..!

ஹைக்கில்
மயக்கும்
தமிழ் ஹைக்கு...!

டிவிட்டரி- ல்
என்னை
இழுக்கும்
காதல்
பேக்கிரி..!

ஐ எம் ஓ - ல்
வந்த
ஐம்பொன்...!

நான் இல்லாவிட்டால்
தாலி கட்டாமலே
அவள் கைம்பெண்...!

கவலை வேண்டாம்
நீயே என்
மணப்பெண்..!

தடங்களை
உடைப்பேன்..!
என் கரு குயிலினை
மீட்பேன்...
நிச்சயம்
மணப்பேன்...!
உன்னில் தானடி கரைவேன்..!
உன் மடியில்தானடி மறைவேன்..!

வீரமணி கி
வயலூர்
விருத்தாசலம்..

எழுதியவர் : வீரமணி கி (7-Oct-16, 6:13 pm)
சேர்த்தது : வீரமணி கி
பார்வை : 218

மேலே