பாரியும் என் கனவும்
கனவு
பாரி மன்னன்
என் கனவில்
வந்தான்...
காட்டில்
ஏதோ ஒரு தேர் கிடைக்க
எடுத்து ஓட்டியதாகச்
சொன்னான் ..
மீண்டும்
ஒரு முறை
முல்லை கொடிக்கு
தேரை
கொடுத்து விட்டீர்களா?
என்றேன்...
முல்லையே
தென்படவில்லை!
உங்கள்
கான்கிரிட் காட்டில்
என்றான்...