வானவில்
வண்ண வண்ண வானவில்
வானில் வந்து சேருது
நீண்டு வளைந்து காணுது
வானை விண்ணோடு சேர்க்குது
அண்ணாந்து பார்த்து
ரசித்து கொண்டே இருந்தேன்
வந்த சுவடு தெரியாமல்
வான வில் காணாமல் போனதே
வண்ண வண்ண வானவில்
வானில் வந்து சேர்ந்த பின்னே
காணாமல் போனதேன் ?
நிலையற்ற மனித வாழ்வைப்போலே