அம்மா நம் தெய்வம்
அம்மா...
உறவுகளில் உன்னதம்.
அம்மா...
உண்மையின் மறுஉருவம்...
அம்மா...
சுமைதாங்கி
அம்மா...
தன்னலமற்ற தியாகச்சுடர்
அம்மா...
மாதரில் மாணிக்கம்.
அம்மா...
உறங்காத கண்கள்.
அம்மா...
சேவையின் மறுப்பெயர்.
அம்மா...
மாறாத பாசம் மடியும் வரை.
அம்மா...
தூயவள்
அம்மா...
வறுமையிலும் வள்ளல்.
அம்மா...
முக்காலம் அறிந்தவள்.
அம்மா...
குடும்பத்தின் நீதிபதி.
அம்மா...
குடும்பத்தின் ஆலோசகர்.
அம்மா...
விட்டுக்கொடுப்பவள்.
அம்மா...
ஈடு இணை இல்லாதவள்.
அம்மா..
நம்மிடம் பேசும்தெய்வம்.
அம்மா...
குடும்பத்தின் ஒளிவிளக்கு.
அம்மா...
குடும்பத்தில் சகலமும்.