காதல் பிறந்தது இசையாலே

காலை கதிரவன் ஒளியாலே
கமம் செய்தோம் விழியாலே
காலம் வந்தது விசையாலே
காதல் பிறந்தது இசையாலே

உன் மூச்சு பட்ட இடத்திலே
என் மூச்சும் தொட்டு போகுதே
உன் பாதம் பட்ட இடத்திலே
நான் விதைச்ச நெல்லும் சாயுதே

உமியும் உமிழுதே
உன்னைக்கண்டு உறையுதே
பயிரும் காதலும் அறுவடை செய்ய
என் உயிரும் உன்னை நாடுதே
நெல்மணியும் நானும் உன் மடியிலே
கமமும் காதலும் மணக்குது நொடியிலே

தை மாதம் பிறந்தது
வாழ்வில் கரும்பும் தேனாய் இனித்தது
கமமும் கடமையும் என் கண் முன்னே
காதலும் வாழ்க்கையும் உன் அன்பின் பின்னே
நாம் விதைத்த நெல்லும்
உன்னால் படைத்த சொல்லும் இறைவனுக்கே...!

====================================
(கமம்-விவசாயம்)

பிரியமுடன்,
J K பாலாஜி

எழுதியவர் : J K பாலாஜி (8-Oct-16, 9:12 am)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 152

மேலே