தரிசனம் தருவாயா

ராட்ஷசத அழகே
வானளவு திமிரே
வசீகரச் சிரிப்பே
மாந்துளிர் நிறமே
மார்கழி குளிரே
இளவெயில் தகிப்பே
மரகதத் தளிரே
பைந்தமிழ் சொல்லே
வைரமுத்து வரியே
கம்பனின் கவியே
கார்கால முகிலே
காட்டுத் தேனே
மென்காற்றின் சுகமே
கருங்குயில் குரலே
கற்பகத் தருவே
ஆழ்கடல் வனப்பே
அலைக்கடல் நுரையே
பண்டைக்கால புதையலே
முழுமதி முகமே
விண்மீன் ஜொலிப்பே
தென்றல் தோழியே
'கதிர்'(ர)வன் காதலே
சன்னல் திறவாயோ
தரிசனம் வேண்டியே
தினசரி வாடுதே
எதிர்விட்டு காவலே
ஆசைக் காதலன்
அன்புடன் கதிரவன்

எழுதியவர் : arunmozhi (8-Oct-16, 3:23 pm)
பார்வை : 105

மேலே