கண்கள் இரண்டும் தேடுதே

புன்னகை மொட்டுகளை உதிர்க்கிறாய்
பூக்களாய் மலர்கிறேன் என்னுள்...!
பனித்துளி சாரலில் நனைகிறாய்
மனதால் மணக்கிறேன் உன்னுள்...!

கண்கள் இரண்டும் தேடுதே
என் உள்ளம் உன்னை நாடுதே...!
மனம் இரண்டும் பாடுதே
என் உயிரும் உன்னுள் பாயுதே...!

காதல் மொழியும் மொழியுதே
உன் மௌனம் என் முன் கலையுதே...!
என்னை விட்டு என் உயிரும் நகருதே
என் காதலும் கண்ணீரில் கரையுதே...!

==================================
பிரியமுடன்,
J K பாலாஜி

எழுதியவர் : J K பாலாஜி (8-Oct-16, 10:34 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 926

மேலே