பூக்க மறந்த பூக்கள்

பூக்கள் என்றாலே பூப்பதற்கே..
தேனீக்கள் அதன்மேல் மொய்ப்பதற்கே..
பாக்கள் பலநூறு பூக்கவைக்கும்
பூக்களை சிரிக்கவே மலரவைப்போம்..

பலவண்ணப் பூக்கள் இதமளிக்கும்
கண்ணுக்கு நிறைவாய் குளிர்ச்சிதரும்
எண்ணத்தை வளமாக்கி இளமைதரும்
மண்ணுக்கு உரமாக மடிந்தேவிழும்

பூக்களின் சுகந்தம் மயக்கிடுமே
இதயத்தை புத்துணர்வாய் இயக்கிடுமே
பூத்திடும் தாவரம் வாழுதற்கு
உதவிடும் மனதினை கொண்டிடுவோம்

இயற்கை வளங்களை அழிக்கின்றோம்
செயற்கை உலகினை படைக்கின்றோம்
காற்றையும் நீரையும் மாசாக்கி
இயற்கையை விற்றே காசாக்குகின்றோம்

பூவுலகே நமது தோட்டமாகும்
பூமியை பேணுதலே நல்லதாகும்
நிலமெங்கும் மலர்கள் பூப்பதற்கு
உளங்களை திருத்தி உழவுசெய்வோம்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Oct-16, 8:56 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 163

மேலே