விருந்தாளி

விருந்துக்கழைத்த
விருந்தாளி

வழித்தவறி சென்று

விடாக்கூடாதென்று

வழிமேல் விழிவைத்து

காத்திருக்கும் உறவைப்
போல

இலைப்பாற நிழலின்றி

உன் வருகைக்காக

கால்கடுக்க காத்திருந்து

சோர்ந்து அமர்ந்து விட்டான்

விவசாயி

உறவாட நீ வருவாயா

மழையே? #sof #சேகர்

எழுதியவர் : #Sof #sekar (9-Oct-16, 11:00 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : virunthaali
பார்வை : 181

மேலே