சந்திப்பு

உனக்கும் எனக்குமான சந்திப்பை
நிச்சயித்தவன் யார்?
என்வழியில் நீயும் உன்விழியில் நானும்
வரக் காரணமாயிருந்தா காரணகர்த்தா யார்?
முதல் சந்திப்பும் முதல் வார்த்தையும்
முதல் காதலும் முதல் பேச்சும்
மூச்சு போகும்வரை உள்ளில் இருக்கும்
நினைவே தப்பினாலும் உள்ளத்தில் இருக்கும்
எனக்கான நிமிடங்களை உனக்காய் கரைத்தேன்
என்பசி போனாலும் நீசொன்னால் புசித்தேன்
உன்சந்திப்பின் முன்னால் கவிதை வாசித்தேன்
உன்சந்திப்பின் நிமித்தம் கவிதையுன்னை நேசித்தேன்
மலரும் வண்டும் நறுமணம் கொடுக்கும்
மேகமும் மேகமும் பூமிதனை நனைக்கும்
வார்த்தைகள் சந்திக்க கவிதையும் பிறக்கும்
உனைசந்தித்த எனக்கோ கண்ணீர்மட்டும் கிடைக்கும்
பார்க்காமலே இருந்திருந்தால் நன்றாய்த்தான் இருந்திருக்கும்
உன்பிரிவென்னும் காயத்திற்கு எங்கேதான் மருந்திருக்கும்
உனைசந்தித்த கண்களிப்போ பார்த்திடத்தான் மறுக்குதே
உனை நெஞ்சுக்குள் சுமப்பதனால் வாழ்வுமிப்போ நடக்குதே....