ஓரவிழிப்பார்வையிலே

ஓரவிழிப் பார்வையிலே ஓராயிரம் அம்புண்டு
என்னிதயம் தாக்குதற்கு ஒருகோடி வாளுண்டு
போராட்டம் தேவையில்லை புன்சிரிப்பே போதுமடி
நின்பாதம் விழுந்திடுவேன் உனையள்ளித் தாங்கிடுவேன்
தேராக நடந்துவர்ற திகைப்பாக எனக்குள்வர்ற
கண்ணுக்குள் மின்னல்கொண்டு அடுத்தடுத்து எய்துவர்ற
நேராக எதிரில்வர்ற இடிமழையாய் காதல்வர
எனைமுழுதாய் இழந்துட்டேன்டி நீயாக ஆகிட்டேன்டி
ஆறாக பெருகுதிங்கே அன்புவெள்ளம் உந்தன்மீதே
மண்ணுக்கு வந்தபயன் கிடைச்சுட்டதா நினைப்பு
பெரிதாக எதுவும்வேண்டாம் உன்னன்பு போதுமடி
வண்ணவண்ணக் கனவுகளே நெஞ்சுக்குள் தினம்வருது
அரிதாக தூக்கம்கண்ணை சிலநேரமே தழுவ
நினைவெல்லாம் நீமட்டும் நிலையின்றி நான்மட்டும்