வானம்
எட்டாத உயரத்தில்
"எழிலுடன் அமைந்து
இருக்கும் வானமே"!!!!!!!
உன்னுல் இன்னும்
எழிலாக
மஞ்சல் முக நிலவினை
அமைத்தும்,
எண்ணிக்கையில்லா
நட்சத்திரங்களை
மச்சமாக கொண்டும்,
வண்ணம் கொண்ட
வானவில்லை புருவமாக
கொண்டும்,
வெண்மேகம் அவளை
மேலாடையாக அமைத்து
உன்னை மறைத்தாலும்,
நீ வெட்கப் படும் போது
உன் புன்னகை
சாரலில் பூமி எங்கும்
பூக்கள் பூர்த்து
புத்துணர்வைக்
கொடுக்கின்றது!!!!!!!!!!.......
உணர்வு கொண்டு
உன்னை உயர்ந்து
பார்க்கும் போது
என் உள்ளம் எல்லாம்
உருகுகின்றது!!!!!!!!!
தொடுவானமாக உன்னை
தொட நினைத்தேன்
ஆனால்
நீ தொலைவில்
சென்று விட்டாய்!!!!!!!!
"வானமே"
உன்னை யாராவது
தொட்டு விடுவார்கள் என்று
தொலைவில் சென்றாயா!????????
இல்லை
யாரும் தொட வேண்டாம்
என்று தொலைவில்
இருக்கின்றாயா!!????????
தெரியவில்லை!!!!!!
ஆனால்
தொடும் தூரத்தில்
நீ இல்லை என்றாலும்,
உன் அழகு
என்னவளை போன்று
எப்போதும் என் மனதை
தொட்டுச் செல்கிறது...!!!!!!!!!!!!