எதுமில்லா நான்

எதுவுமில்லா நான்:
அன்பில்லா அனாதை நான்
அடைக்கலம் இல்லா அலைகடல் நான்
சுவாச காற்று தந்த தாய் எங்கே
தலைவலி என்று அழுந்தால் கூட
மருந்தாக தாய் இல்லா தனி மரம் நான்
தவறுகளை தட்டிகேட்க்க தந்தை இல்லா
காட்டறக நான்
பல கனவுகளை சுமந்து கொண்டு இருக்கும்
சுமைதாங்கியாக நான்
உறவுகளே இல்லா உருகுலைந்த உடலாய் நான்
தினம் தினம் வருந்தினேன்
தீயில் இறங்கினேன் கடவுளே
அன்னை என்று அழைத்திட ஓர் அன்பில்லையே
தட்டிகொடுக்க தந்தை இல்லையே
அனைத்து பொருள் இருந்தும் ஆருயீர் இல்லா
அனாதை நான்

எழுதியவர் : சண்முகவேல் (9-Oct-16, 10:23 pm)
பார்வை : 467

மேலே