பிள்ளையில்ல நாங்கள்

பிள்ளையில்ல நாங்கள்
நாங்கள் சிற்பமாய் செதுக்கியது ஒன்றே
செவிகள் சிலிர்த்திட மனம் சிறகாய் பறந்திட
வாழ்ந்தோம் மூன்று ஆண்டுகள்
அளவில்லா ஆனந்தம் அன்பே
முத்துக்கள் உதிர்ந்திட புன்னகை புதைந்திட
எங்களுக்கு ஆனந்தம் அன்றே அழிந்திட
ஆண்டவன் கொடுத்தான் வலிமிகுந்த வாழ்க்கையை
நாங்கள் வளர்த்த செடிகளில் உள்ள
பூக்கள் உதிர்ந்தளே உள்ளம் உடைந்திடும்
எங்கள் உயிரோ விட்டு சென்றது உலகம் கடந்தது சென்றது
ஒவ்வொரு நாளும் உயிர் தீயில் வெந்தது
உள்ளம் நொந்தது
ஆயிர கனவுகள் கண்டோம் அவை
கண் மூடி திறக்கையிலே கலைந்திடவா
என் கனவே

எழுதியவர் : சண்முகவேல் (9-Oct-16, 10:45 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
பார்வை : 146

மேலே