பெரியாரை சார்ந்ததோர் உள்ளம்

சாதியில்லே...
சாமியில்லே...என
கத்திச்சொன்னவரே..
மனுச மத்தியில் நின்னு
கத்திச்சொன்னவரே....

பலன் ஒன்னும் பார்க்காம..
பரலோகம் போனீரே...

பெருங்காயம் பட்டுப்போச்சு...

எப்படியா....?!!

நால்-சந்தியில் கற்சிலையாய் நீங்கள்
நன்றாக இருப்பதால்....

சாமியில்லை எனச் சொல்லி..
நீரே சாமி ஆகலாமா...?

சொல்லுங்க நாயக்கர் ஐயா..
சொல்லுங்க....

ஒருவேளை நீங்க தேவராக இருந்தா -
இந்த
மடமை தீயில் இருந்து மக்கள் .,
வெளிவந்திருப்பார்கள்....?

மூளையுண்டா உனக்கு....?

இவர்கள்.,
கள்ளருந்தி காட்டுக்கு போனால்
உனக்கு என்ன...?
கள் கொடுப்பதை வேரோடு சாய்த்ததேனோ..?

அந்த மரம் இருந்தால் இந்நேரம்
மழையாவது பொழிந்திருக்கும்...

நீ காப்பாற்றிய உயிர்களின் பதர்கள் தான்-இன்று
நீ
காமுகன் கயவன் திராவிடன்...
என
அன்போடு அழைக்கிறார்கள்..

இது தேவையா...?

இனி ஒரு முறை பிறக்காதே..!
பிறந்தாலும் இம்புட்டு நல்லவனாக
வாழாதே....!

எழுதியவர் : மோகன் சிவா (10-Oct-16, 12:10 am)
பார்வை : 127

மேலே