பிறப்பு

ஒரு முறையாவது காற்றாய்
பிறக்க நினைத்தேன்..,
'புல்லாங்குழலில் இசையாகிவிட..'!
ஒரு முறையாவது மலராய்
பிறக்க நினைத்தேன்..,
'பனித்துளியில் திளைத்துப்போன இதழாய் மிளிர..'!
ஒரு முறையாவது மின்மினியாய்
பிறக்க நினைத்தேன்..,
'ஒளச்சுடரின் ஒளி அலையாய் உலா வர..'!
ஒரு முறையாவது உன் இலட்சியமாய்
பிறக்க நினைத்தேன்..,
'நீ என்றும் நினைக்கும் தருணங்களுக்காய்..'!