சாதாரணப் பெயரா அது

தனலட்சுமி!
இந்தப் பெயர் ---
அதற்குரிய பெண்ணுக்கு
தன்னம்பிக்கையை கொடுக்கும்!
நிறைய செல்வம் அடைவோம்
என்ற தன்னம்பிக்கையை!
பெருமையை கொடுக்கும்!
செல்வம் என்ற
ஐஸ்வர்யத்தின் பெயரால்
தாம் அழைக்கப்படுகிறோம்
என்ற பெருமையை!
செல்வத்தின் முக்கியத்துவத்தை மட்டும்
இப்பெண்ணின் பெற்றோர்
குழந்தைப் பருவமுதல்
போதித்து விட்டால்------
செல்வம் நிறைய சேர்க்கும் லட்சியம் கொடுக்கும்!
கல்வியின்றி செல்வம் இல்லை என்பதால்
கல்வியை நன்கு கற்கும் வைராக்கியம் கொடுக்கும்!
எப்படிப்பட்ட கல்வி ?
கசடற்ற கல்வி!
உயர் கல்வி! ஆராய்ச்சிப் பட்டம் பெறும் கல்வி!
கல்வியால் வேலை கிடைத்தாலும் ----
கடின உழைப்பின்றி
ஊதியமோ ---
ஊதிய உயர்வோ ----
ஊதிய உயர்வு தரும் பதவி உயர்வோ ---
சாத்தியம் இல்லை என்பதால்
உழைக்க வேண்டும் என்ற நல் எண்ணம் கொடுக்கும்!
உழைத்து பொருள் ஈட்ட பட்ட சிரமத்தால் ---
பக்தியோடு செல்வத்தை சேமிக்க தோன்றும்!
தேவையற்ற செலவுகளை குறைக்க தோன்றும்!
மீதமுள்ள செல்வத்தில் தம்மால் இயன்றதை
ஏழ்மையில் அல்லலுறுவோர்க்கு
கொடை வழங்கத் தோன்றும்!
நிறமில்லை அழகில்லை என
தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண் ஒருத்திக்கு
இந்தப் பெயர் மட்டும் இருந்து
அவளுக்கு ஒரு நல்ல உண்மையான தோழியும்
இருந்து விட்டால் போதும்!
அந்தத் தோழி அந்தப் பெண்ணை பார்த்து
"உன் பெயரின் மகத்துவம் தெரியுமா?" என்று
ஊக்குவிக்கும் வசனங்கள் சொன்னால் போதும்!
பொங்கி வரும் மகிழ்ச்சியிலே புது அழகு ஜொலிக்கும்!
எப்பேர்ப்பட்ட பெயர் இது!
தனலட்சுமி என்ற பெயர் கொண்ட பெண்கள்
தன் பெயரை
செல்வத்தை மட்டும் குறிப்பதாக நினைக்காமல்
கல்வி,உழைப்பு, செல்வம்,சேமிப்பு,கொடை மற்றும்
பதவி உயர்வு மூலம் வரும் ஆளுமைக் குணம் என
மேற்சொன்ன அத்தனை அம்சங்களையும் குறிப்பதாக-
திரும்பத் திரும்ப நினைக்க வேண்டும்!
நினைத்தால்
வெற்றிகரமான வாழ்க்கை உறுதி!
தனலட்சுமிகளே வளர்க!
தனலட்சுமிகளே வாழ்க!
வாழ்க வளமுடன்!

எழுதியவர் : ம கைலாஸ் (14-Oct-16, 1:59 pm)
பார்வை : 1389

மேலே