அப்துல் கலாம் பிறந்த நாள் இளைஞர்களின் எழுச்சி நாள்

அன்னை தமிழைப் போற்றியவர்
ஆசான்களை மறவாத மாணவர்
இளைஞர்களுக்கு பிடித்தமானவர்
ஈடில்லா குழந்தைகளைக் கண்டு மகிழ்ந்தவர்
உலகம் அறிந்த பேரறிஞர்
ஊக்கத்தை விதைத்த ஆராய்ச்சியாளர்
எண்ணக் கனவை அள்ளிக் கொடுத்த வள்ளல்
ஏவுகணையைப் படைத்த அக்னி சிறகு
ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டவர்
ஒருமைப்பாட்டை வளர்த்தவர்
ஓய்வு பெற மறுத்தவர்
ஒளசித்தியம் பெற்றவர் ...

கனவு பல கண்டவர் கலாம்
காற்றில் நாமும் மிதக்கலாம்
கிழக்கில் தினம் உதிக்கலாம்
கீழும் மேலும் பறக்கலாம்
குறிவைத்து சாதிக்கலாம்
கூடுவிட்டு கூடு போகலாம்
கெடுதல் செய்யாமல் இருக்கலாம்
கேடயத்தை வாங்கிக் குவிக்கலாம்
கையோடு கைகளை இணைக்கலாம்
கொடிய செயலை ஒழிக்கலாம்
கோள் விட்டுக் கோள் போகலாம்
கெளதம புத்தராய் ஆகலாம்

சங்கீதத்தைக் கேட்கலாம்
சாரீரத்தை பாதுகாக்கலாம்
சினத்தை தவிர்க்கலாம்
சீருடையை வெளுக்கலாம்
சுறுசுறுப்பாக இயங்கலாம்
சூழ்ச்சி வலையைக் கிழிக்கலாம்
செருக்கைக் குறைக்கலாம்
சேர்ந்தே உழைக்கலாம்
சைத்தானை ஒழிக்கலாம்
சொல்லியபடி நடக்கலாம்
சோம்பேறித்தனத்தை வெறுக்கலாம்
செளகரியத்தை மறுக்கலாம்

தன்னம்பிக்கையை வளர்க்கலாம்
தானம் தினம் கொடுக்கலாம்
திறனை சோதித்துப் பார்க்கலாம்
தீய செயல்களைத் தவிர்க்கலாம்
துன்பத்தை வேரோடு அறுக்கலாம்
தூய்மை இந்தியாவை உருவாக்கலாம்
தென்றலை இரசிக்கலாம்
தேவையைத் தேடி தீர்க்கலாம்
தைரியத்தோடு எதையும் சந்திக்கலாம்
தொலை தூர பயணத்தை துவங்கலாம்
தோழமையோடு வாழ்ந்து பார்க்கலாம்
தெளதாரீயனாய் இருக்கலாம்
இப்படி கலாம் போல் சேவை செய்யலாம்
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்
ஆனால் நமது இறப்பு சரித்திரமாக
இருக்கவேண்டும் என்றார்...
நமது ஏபிஜே அப்துல்கலாம்!
அவர் பிறந்தநாளை
இளைஞர்கள் எழுச்சி நாள் தானே!

எழுதியவர் : கிச்சாபாரதி (14-Oct-16, 10:34 pm)
பார்வை : 2215

மேலே