ஹைக்கூ

இரவிலும்
கவரி வீசும்
நாணல் !

சுற்றும் இராட்டினம்
முற்றிலும் இலவசம்
கிணற்றில் வாளி !

அரச மரத்தடியில்
அடிக்கடி வெட்டு
தாயம் !

கலகலப்பு
கைகலப்பு
கோயில் திருவிழா !

நிஜம் பாதி கதை மீதி
விவாத மேடை
திண்ணை !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Oct-16, 10:19 pm)
Tanglish : haikkoo
பார்வை : 232

மேலே