பல விகற்ப இன்னிசை வெண்பா பதித்த படத்தில் இருக்கு மிருசொல்
வேறொரு வலைத்தளத்தில் நண்பர் ஒருவர் ஒரு படத்துடன் நான் எழுதிய இரு கவிதைகளைக் கண்டு "நாங்கள் யாரென்று நீங்களே சொல்லுங்கள் கல்லறையில் எழுதிவைத்துள்ளதை பார்த்து" என்று கேட்டிருந்தார். ஒரு கவிதையின் கீழ். மற்றொரு கவிதைக்கு பதிலாக ஒரு படம் பதிவிட்டிருந்தார். அவர்க்கு நான் விடுத்த பதில் கீழே :
1.
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
பதித்த படத்தில் இருக்கு மிருசொல்
இறைவன் இருப்பது ஒன்றில் எதற்கு
இலையோர் கடவுள் எனமொழி வார்க்கும்
இருகண் திறந்திடவேண் டி
2.
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
ஏறி இறங்கிய மேடைகள் தோறும்
இடிபோல் முழங்கி இலையென தெய்வம்
உலகோர்க் குரைத்த தலைவர் நினைவில்
உழலும் பொழுது இடுவது மாலை
விழுவது கல்லில்தா னே
17-10-2016