எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மழுங்காத தமிழ் என்று தலைநிமிர்த்தி
சொல்லடா தமிழா

அந்நியர்களுக்கு நீ அடிமையில்லை
இந்திய நாட்டின் விடுதலையை பெற்றுத்தந்து சென்ற மகான்கள் வாழ்ந்த மண்ணிலே அநீதிகள் நடக்கலாமா?

மழை காலம் வந்தும் மழை வரவில்லை வறண்டு கிடக்கின்றன விவசாய நிலங்கள் என தலை மேல் கைவைத்து அழுவதால் உன் பிரச்சனை தீர்ந்து விடுமா?

இனிவரும் சந்ததியினருக்காகவாவது
பல அணைகளை கட்டி நீரை சேமித்து வை விவசாயிகளின் வியர்வை துளி என்றும் வீண் போகாது

பச்சைப்பசேலென காட்சி தரும் நெல் மணிகளை கண்குளிர பார்த்து ஆனந்தமடையும் காலம் வெகுதூரம் அல்ல தீக்குளிப்புகள் தான் இதற்கு முடிவுகளல்ல

நிச்சயம் நம் நாடு என்றும் பஞ்சம்பசி இல்லாத நாடாய் இருக்கும் நீ சிந்தித்து செயற்பட்டால்..

சி.பிருந்தா
மட்டக்களப்பு

எழுதியவர் : சி.பிருந்தா (17-Oct-16, 3:57 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 87

மேலே