அடங்க மறுக்குதே இதயம்

இருக்கும் உயிரும் இல்லை என்னிடம் ;
வாழ்க்கையின் தூரங்களோ வானம் வரையிலே !
விண்ணை தாண்டி போனாலும் ;
விரக்தி மட்டுமே தோணுதே !
வாழ துணிந்தாலும் ;
வழி மறைக்கும்உலகம் !
துடுப்பு போட்டாலும் ;
கடந்து செல்ல முடியாத -
கிணற்று தவளை !
காதில் விழும் செய்திகளும் ;
கண்ணால் கண்ட காட்சிகளும் ;
எடுத்து சொல்லவோ எனக்கும் தயக்கம் !
அடங்க மறுக்குதே இதயம் !
உண்மையை சொல்லவும் முடியாது ;
உதாசீனப்படுத்தவும் முடியாது ;
உறக்கம் தொலைத்தேன் !
ஊமையாய் நின்றேன் !
அரசியல் அமைப்பின் ;
அடித்தட்டில் இருப்பதால் ;
அச்சம் மட்டுமே அடிமனதில் !
அடங்க மறுக்குதே இதயம் !
மெய்யை சொன்னாலும் ;
பொய்வழக்கில் போவதென்னவோ ;
சிறைச்சாலைக்குத்தானே !
அடங்க மறுக்குதே இதயம் !