மீண்டும் ஒரு ஆசை

கருவரையில் தனி அணுவாய் மீண்டும் ஒரு முறை நுழைந்திட ஆசை....
தாய் முகம் முதல் கண்டு அவள் வாசம் நான் உணர்ந்து மீண்டும் ஒரு முதல் கண்ணீர் உதிற்றிட ஆசை....
ஆறாம் மாதம் தரையில் புரண்டு ஏழாம் மாதம் திரும்ப கவிழ்ந்து மீண்டும் ஒரு முறை தவழ்ந்திட ஆசை...
தந்தை கை பிடித்திழுக்க தாயின் கை வரவேற்க மீண்டும் ஒரு முறை நடை பழக ஆசை....
அது பழகி சில நாளில் நானாக
நடை தொடங்கி மீண்டும் ஒரு முறை விழுந்து எழ ஆசை....
மழை தூரும் சாரலில் மண் வாசம் அதை விரும்பி மீண்டும் ஒரு முறை சேற்றில் அழுக்கு பட ஆசை. . . .
தோழன் வாய் திறக்க ஆசிரியர் தடி எடுக்க மீண்டும் ஒரு முறை முட்டியிட ஆசை......
பொய்களை கற்று விடுமுறை காரணம் கூறி மீண்டும் ஒரு முறை ஆற்றில் குதித்திட ஆசை. . . . ,
தொலைக்காட்சி விடுத்து பயத்துடன் படித்து மீண்டும் ஒருமுறை முதல் மதிப்பெண் எடுத்திட ஆசை.......
உயர் கல்வி ஆர்வம் பட்டணம் கடத்த சிற்றுன்டியில் நேரம் மறக்க மீண்டும் ஒரு முறை பேருந்தை துரத்த ஆசை.....
அன்னை,, முகம் முறைக்க, தின்னை எனை அழைக்க மீண்டும் ஒருமுறை விண்ணை வெறித்திட ஆசை......
கல்லூரி முதல் நாள் ,தேவதை வரும் நாள், மீண்டும் ஒரு முறை அத்திருநாள் கண்டிட ஆசை.....
பருவத்தின் வசம் பட்டு, அவள் உருவத்தை மனம் கொண்டு, மீண்டும் ஒரு முறை ஓவியன் ஆகிட ஆசை....
முறைத்த ஒரு நாள், சிரித்த மறு நாள், மீண்டும் ஒருமுறை மண்ணிக்க வேண்டிட ஆசை.....
படிப்பை தொலைத்து, தூக்கம் கலைத்து, மீண்டும் ஒருமுறை உன் நினைப்பை சுமந்திட ஆசை.....
காலம் செல்ல, கல்லூரி முடிய,மீண்டும் ஒருமுறை காதலை சொல்லிட ஆசை...
காதலி எந்தன் காதலை ஏற்க,குறுஞ்செய்திமூலம் தகவல் சொல்ல, மீண்டும் ஒருமுறை காதால் கேட்டிட ஆசை.....
காதல் மலர, மோகம் கூட ,மீண்டும் ஒரு முறை கல்வனாய் மாற ஆசை
காலன் எந்தன் காதல் திருட,
காட்டுத்தீயில் தனியாய் தவிக்க, மீண்டும் ஒருமுறை தற்கொலை முயன்றிட ஆசை....
பெற்றோர் கண்ணீர் நெஞ்சம் வதைக்க, மூச்சுக் காற்றும் ரணமாய் மாற, மீண்டும் ஒரு முறை மறத்தே வாழ்ந்திட ஆசை.......
சுற்றம் சூழ்ந்து நகைச்சுவை செய்ய, நட்பு மட்டும் ஆறுதல் கூற, மீண்டும் ஒருமுறை போலி புன்னகை உதிற்றிட ஆசை....
இது என்ன ஆசை?? படைத்தவனுக்கே பொறுக்காத பொல்லாத என் ஆசை ,....
வேண்டும் என்
வாழ்க்கையை மீண்டும் வாழ்ந்திட வேண்டும் அதுவே எனக்குள் ஒரு பேராசை......