துள்ளல் அடங்கிய தோகை
![](https://eluthu.com/images/loading.gif)
மானாய் துள்ளித்
திரிந்த
நான் இன்று,
துள்ளல் இன்றி
துடிப்படங்கிய
செத்த மீன்
கணக்காய்!
காதில் வண்டின்
ரீங்காரமாய்
உன் பெயரே
ஒலிக்கின்றது!
பசிமயக்கம்
உணவைப் பற்றியும்
யோசிக்கவில்லை
கண்களை மூடினால்
மனத் திறையில்
உன் உருவம்
மறந்து போகவும்
மனம் மருத்துப்
போகவும்
மார்கம் தெரியாமல்,
மூலையில் முடங்கி
விட்டேன்.
தாமதமாய் புரிந்தது
சந்தோசத்தை விட
வலி அதிகம்
#காதலில் என்று!
#Sof_sekar