காதல் குசும்பு
ஆயிரம் பேர் சூழ்ந்திருக்கும் கூட்டத்திலும்,
உனை நொடியில் கண்டுகொள்வேனடி ,
என் கண்மணிகளிரண்டும் கூகுளாய் அலசித்தேடி!
என் இதய வன்தட்டில் ,
இன்னொருத்தி இடம்பெறாமலிருக்க,
உன் மென்னுடல் பொருத்தி,
உடனே நச்சுநிரல்தடுப்பி [AntiVirus] போடுவாயா...?
முத்தமாக என்னிதழ் தட்டில்!.....