விதி

ஈருயிர் ஓருடலாய் காதலில் திலைத்து
காவியம் படைக்க நினைத்த
காதலர்கள் நாங்களில்லை
கனவன் மனைவியாய் புரிதலில் விட்டுக்கொடுத்து
வாழ நினைத்த தம்பதிகள் நாங்கள்
இயற்கை பொறாமையினால்
எங்கள் மீது சீற்றம் கொண்டு
எங்களைப் பிரிக்க நினைத்து தோற்றுவிட்டது
துவளவில்லை நாங்கள்
அமைதியுடன் ஏற்றுக் கொண்டோம்
பிரிக்க இயலா
பெருவாழ்வில் எங்களை
இனைத்துக்கொண்டோம்
நன்றி சொல்லி விடைபெறுகின்றோம்
இருவரையும் வழியனுப்பியமைக்கு.
#sof_sekar