அம்மாவுக்கு நிகர்
என் வீட்டில் சோறு சுவையாக இருந்தால் என் அப்பா சாப்பிடுவார்
சோறு சூடாக இருந்தால் நான் சாப்பிடுவேன்
சோறு மிட்ச்சம் ஆக இருந்தால் மட்டுமே என் அம்மா சாப்பிடுவாள்
வெளியே இருந்து வீட்டிற்கு வருகையில் என் கை பையை பார்ப்பவள் என் தங்கை
என் சட்டை பையை பார்ப்பவன் என் தந்தை
ஆனால்
என் இரைப்பையை பார்ப்பவள் என் தாய் மட்டுமே ...
ஏனோ அவளுக்கு மட்டுமே என் பசி புரிகிறது .....
என் சிறிய பருவத்தில் மழையில் நினைந்ததை விட என் அம்மாவின் கண்ணீரில் நினைந்தது தான் அதிகம் ......
அவள் எப்பொழுதும் புடவை கட்டிய ஆணாகவே தோண்றுகிறாள் எனக்கு......