வஞ்சியவளுக்கு வழிகாட்டுங்கள்

" வஞ்சி "
கொஞ்சும் தமிழினை மிஞ்சும் வாயாடி
பிஞ்சுப் பருவத்தில் கள்ளிக்குத்தப்பி கல்விக்கூடம்செல்லா கலைவாணி...
பள்ளிசெல்ல பயணில்லையென பக்கத்துவீட்டு பாட்டன்சொல் கேட்டு
அல்லி மலர்பொருக்கி அன்றாடம் அதைவிற்று பெற்றோருக்குப் பந்தியிடும் அன்னலட்சுமி...
மணற்காட்டில் கிணர்திட்டில் காலை உணவு
இடர்வெயில் தென்னைநிழலில் மதிய உணவு
தொடர்வண்டிப் பாதை உரசிச்செல்லும் அவள்வீட்டில் இரவு உணவென இருப்பவளுக்கு...
கடல்கடந்து தேசம்திரும்பிய ஒருவன்
கைப்பேசி வாயிலாய் பொய்பேசிடும் தரகனை நம்பி
கயல்விழியவளை காண்பதற்கு அப்போது வந்திருப்பதாய் நானறிந்துசெல்ல...
மஞ்சள்வயல் கூலிக்காரியாய் வயதினைத் தொலைத்து
மிஞ்சியிருக்கும் அவளைக்காண தெருமுற்றத்தில் எத்தனைக் கூட்டம்...
அவளைக் பெண்பார்க்க வந்த பெரியோர்களின் முத்தான பேச்சுக்களுக்கும்
மாநாடுகாணும் மாகானம்போல் தெருவெங்கும் முல்லை வாசமுமென...
காண்பதென்ன என் கனவா.. ! இல்லை
கருவாச்சிக்கு வாழ்வில் ஒளிரப்போகும் விடிவெள்ளியா...?
எட்டிநின்று கண்டதில் மாப்பிள்ளைதான் யாரோ...?
கிட்டச்சென்றுப் பார்த்தால் அடுத்தடுத்தாய் ஆறு மாப்பிள்ளைகள்...!!!!!!
கருவாச்சி இவளெனக் கருதி வேண்டாமென ஒதுக்கி மீண்டும்வந்த
கணக்கு வாத்தியாரின் கடைமகன் ஒருவன்...
பிளவு ஏற்பட்டு பிரிவினையான தனதன்னையின் உடன்பிறப்பு
தவமிருந்து வரம்பெற்று தருதலையாய் ஊர்சுற்றும் ஒருவன்...
பங்காளி வீட்டுப் பெருசுகள் பார்த்த
தக்காளி வியாபாரியின் தலைமகன் ஒருவன்...
ஒருதலைக் காதலாய் ஊருக்குத் தெரியாமல் மனதில்கொண்ட
உரக்கடைப் பண்ணையாரின் முன்றாம்தாரத்து மூத்தமகன் ஒருவன்...
கொஞ்சிவிளையாடி மஞ்சம்கொண்ட வஞ்சியவளின் மனம்கவர்ந்து
பஞ்சம்பிழைக்க பக்கத்துஊர்சென்ற பாத்திரக்காரன் ஒருவன்...- என
வயதொத்த வாலிபர்கள் வரன்தேடும் நிகழ்வினில்
வந்ததொரு வாய்ப்பென நழுவாது கரைசேர்க்க அவளது பெற்றோர்களும் நினைக்கயில்...
அதிஷ்டம்வந்து ஆங்காங்கே அவள்வீட்டில் குடிகொள்ள
இஷ்டம் இதுவென சொல்லிவிட முடியாதவளாய் வஞ்சியிவள் நிற்கின்றாள்...
#வஞ்சியவளுக்கு_வழிகாட்டுங்கள் #வயோதிகம்_கடப்பதற்குள்