மன்னிப்பின் முகங்கள்

மன்னிப்பு ஒரு சம்மட்டி,
இரும்பான இதயங்களை உடைப்பதால்

மன்னிப்பு ஒரு மருந்து,
புண்ணான மனங்களை ஆற்றுவதால்

மன்னிப்பு ஒரு வாசல்,
வேறு திசை இல்லங்கள் ஒன்று சேர்வதால்

மன்னிப்பு ஒரு சொர்க்கம்,
நரகமான எண்ணங்கள் நீர்த்து
போவதால்

மன்னிப்பு ஒரு சங்கீதம்,
ஓலமிட்ட நெஞ்சங்கள் ஒருசேர
மகிழ்வதால்

மன்னிப்பு ஒரு தேன் கூடு,
கலைந்த உறவுகள் ஒன்றித்து
சங்கமிப்பதால்

மன்னிப்பு ஒரு பஞ்சு மெத்தை,
நஞ்சான உள்ளங்கள் பகை மறந்து
இலகுவாவதால்

மன்னிப்பு ஒரு நெடுஞ்சாலை,
மேடு பள்ளமான நினைவுகள்
சீராவதால்

மன்னிப்பு ஒரு ஒளிவிளக்கு,
பகையான ஞாபகங்கள் மறைந்து போவதால்

மறப்போம், மன்னிப்போம்,அன்பில் சங்கமிப்போம்.

எழுதியவர் : (19-Oct-16, 11:40 am)
Tanglish : mannippin mugankal
பார்வை : 76

மேலே