துளிகளின் சுயசரிதை

தவமிருந்து நம்மை பூமிக்கு கொண்டுவந்து,
அந்த தெய்வம் தீர்த்தமாய் தரும் முதல் தாய்ப்பால் துளிகள்.......
சூரியனை நனைத்துவிட்டு , வானம் நம்மை விரலாய்த் தீண்டவரும் மழைத் துளிகள்......
குழந்தை மழலையாய் பேசுகையில்,
நம் மேல் தெறிக்கும் சின்ன சின்ன எச்சில் துளிகள்......
உழைக்கும் போது மனிதனுக்கு மட்டுமே வரும் வியர்வைத்துளிகள் ..
இதயம் பறக்கும்போதும், இதயம் கணக்கும்போதும் ,
உணர்வின் உரைநடையாய் வரும் கண்களின் கண்ணீர்த் துளிகள்....
காதல் மிகுதியால் காமம் கசிக்கும் அந்த உயிர்த்த துளிகள்....
இன்னும் நம் மனதின் ஈரமாய் வருடும் .
கண்ணதாசன்-வைரமுத்துவின் பல கவிதைத் துளிகள்....
இவையெல்லாம் உணர்கையில் நான் மனிதனாய் வாழ்வதற்குப் பெருமை கொள்கிறேன்....ஒவ்வொரு மணித்துளிகளிலும்....!!

எழுதியவர் : பாரதி paravai (19-Oct-16, 2:58 pm)
பார்வை : 90

மேலே