பல விகற்ப பஃறொடை வெண்பா நெஞ்சில் குறிவைத்து தேசிய தந்தையினை

(ஸ்ரீ) ராமனை நான் செருப்பால் அடித்தால் எப்படி தப்பென்று சொல்வீர்கள் என்று(மிக்க தைரியத்துடன்) தந்தி டி.வீ.யில் கேட்கின்ற கிருஸ்துதாஸ் காந்திக்கு இக்கவிதை சமர்ப்பணம்.
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
நெஞ்சில் குறிவைத்து தேசிய தந்தையினை
அஞ்சாமல் கொன்றதொரு பாவிமுன் வீழ்கையிலே
ஹேராம்யென் றோர்சொல்லே வந்ததண்ணல் வாயினிலே
அந்தமகான் பேரிருந்தும் ராம பெருமானை
காலணியால் நீயடித்தால் வீதியெல்லாம் மக்கள்
உனக்கடிப்பார் சாவு மணி
19-10-2016